அடிப்படை உரிமைகள் (பகுதி-3)- வினாக்கள்

அடிப்படை உரிமைகள் பாடத்தை படித்து விட்டு இங்கே தேர்வெழுத வந்தவர்களாக இருந்தால் உடனே தேர்வினை எழுத ஆரம்பிக்கலாம். நேரடியாக இந்தப்பக்கத்திற்கு வந்தவர்களாக இருந்தால், இந்தத் தேர்வினை எழுதும் முன் இங்கே சென்று இந்தப்பாடத்தை ஒருமுறை படித்துவிட்டு தேர்வினை எழுதுங்கள்..
 1. அடிப்படை உரிமைகள் எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது ?

 2. அயர்லாந்து
  இங்கிலாந்து
  தென்அமெரிக்கா
  அமெரிக்க ஐக்கிய நாடுகள்

 3. முதலில் இந்திய அரசியலமைப்பு எத்தனை அடிப்படை உரிமைகளை பெற்றிருந்தது?

 4. 5
  6
  7
  8

 5. தற்போது எத்தனை அடிப்படை உரிமைகள் உள்ளது?

 6. 4
  3
  5
  6

 7. 1978 ஆம் ஆண்டு 44 ஆவது சட்ட திருத்தத்தின்படி அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது எது?

 8. சமய உரிமை
  சுதந்திர உரிமை
  கல்வி உரிமை
  சொத்துரிமை

 9. சரத்து 31-லிருந்து நீக்கப்பட்டு பகுதி 12 சரத்து 300a-ல் சட்டஉரிமையாக வைக்கப்பட்டுள்ள உரிமை எது?

 10. சுரண்டலுக்கெதிரான உரிமை
  பண்பாட்டு உரிமை
  சொத்துரிமை
  பேச்சுரிமை

 11. இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி "இந்தியாவின் மகா சாசனம்" என அழைக்கப்படுகிறது?

 12. குடியுரிமை
  கருத்துரிமை
  பேச்சுரிமை
  அடிப்படை உரிமை

 13. எந்த ஆண்டு ஐநா மனித உரிமைகள் பிரகடனம் உருவானது?

 14. 1938
  1948
  1958
  1953

 15. எந்த சரத்தின்படி உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்று கூறப்படுகிறது ?

 16. சரத்து 31
  சரத்து 30
  சரத்து 32
  சரத்து 33

 17. எந்த சரத்தின்படி உயர்நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் என்று கூறப்படுகிறது ?

 18. சரத்து 230
  சரத்து 147
  சரத்து 52
  சரத்து 226

 19. எதன்படி, பாராளுமன்றத்திற்கு அடிப்படைஉரிமைகள் உட்பட அரசியலமைப்பின் எந்த பகுதியையும்திருத்தமுடியும்?

 20. 10-வது சட்டத்திருத்தம், 1961
  55-வது சட்டத்திருத்தம், 1987
  24-வது சட்டத்திருத்தம், 1971
  44-வது சட்டத்திருத்தம், 1978

 21. குடியரசுத்தலைவரும் ஆளுநரும் சரத்து 14-லிருந்து விலக்கப்பட்டவர்கள் என கூறும் சரத்து எது?

 22. சரத்து 158
  சரத்து 172
  சரத்து 253
  சரத்து 361

 23. எந்த ஆண்டு தீண்டாமை ஒழிப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது?

 24. 1952
  1953
  1955
  1958

 25. எந்த ஆண்டு தீண்டாமை ஒழிப்புச்சட்டம், சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்டது?

 26. 1986
  1976
  1966
  1996

 27. பாரதரத்னா,பத்ம விபூஷன்,பத்மஸ்ரீ போன்ற அரசால் வழங்கப்படும் விருதுகள் எந்த சரத்தால் வழங்கப்படுகிறது?

 28. சரத்து 16
  சரத்து 15
  சரத்து 17
  சரத்து 18

 29. சரத்து 19-இல் எத்தனை வகையான சுதந்திர உரிமைகளை அடிப்படை உரிமைகள் வழங்குகிறது?

 30. 5
  6
  7
  8

 31. தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டால் குடியரசுத்தலைவர் எந்த இரு அடிப்படை உரிமைகளை நிறுத்த முடியாது?

 32. சரத்து 15, 16
  சரத்து 16, 17
  சரத்து 19, 20
  சரத்து 20, 21

 33. தொடக்கக் கல்வி பெறும் உரிமை குறித்து கூறும் சரத்து எது?

 34. சரத்து 20
  சரத்து 21
  சரத்து 21 ஏ
  சரத்து 22

 35. 86வது சட்டத்திருத்தம் 2002, யாருக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என கூறுகிறது?

 36. 5 முதல் 13 வயது வரை
  5 முதல் 14 வயது வரை
  6 முதல் 13 வயது வரை
  6 முதல் 14 வயது வரை

 37. எந்த ஆண்டு கல்வி உரிமை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது?

 38. 2006
  2003
  2009
  2012

 39. எதன்மூலம் கைது செய்யப்பட்டவரை கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்?

 40. சரத்து 20
  சரத்து 21
  சரத்து 22
  சரத்து 23

 41. கொத்தடிமை ஒழிப்புச்சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

 42. 1956
  1966
  1976
  1986

 43. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?

 44. 1984
  1956
  1962
  1986

 45. ஒருவருக்கு தான் விரும்பும் மதத்தை பின்பற்றவும் அதை பரப்பவும் உரிமை வழங்கும் சரத்து எது?

 46. சரத்து 30
  சரத்து 28
  சரத்து 27
  சரத்து 25

 47. 44 வது சட்டத் திருத்தம், 1978 மூலமாக நீக்கப்பட்டசொத்துரிமை எந்த சரத்திலிருந்து நீக்கப்பட்டது?

 48. சரத்து 30
  சரத்து 31
  சரத்து 32
  சரத்து 33

 49. சரத்து 32 இந்திய அரசியலமைப்பின் ஆத்மாவும் இதயம் போன்றது என்று கூறியவர் ?

 50. கே.எம்.முன்சி
  பி.என்.ராவ்
  ஜவஹர்லால் நேரு
  அம்பேத்கர்

 51. சரத்து 32 எத்தனை நீதிப்பேராணைகளை கொண்டுள்ளது?

 52. 10
  8
  5
  3

 53. குடியரசுத் தலைவர் , ஆளுநர் , தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக பயன்படுத்த முடியாத நீதிப்பேராணை எது?

 54. ஆட்கொணர் நீதிப்பேராணை
  செயலுறுத்தும் நீதிப்பேராணை
  நெறிமுறை உணர்த்தும் நீதிப்பேராணை
  தகுதி வினவும் நீதிப்பேராணை

 55. நீதித்துறைக்கு எதிராக மட்டுமே செயல்படுத்த முடியும் பேராணை எது?

 56. செயலுறுத்தும் நீதிப்பேராணை
  தகுதி வினவும் நீதிப்பேராணை
  தடையுறுத்தும் நீதிப்பேராணை
  ஆவணக்கேட்பு நீதிப்பேராணை

 57. அரசு அலுவலர் அரசுப்பணியை மேற்கொள்ள உண்மையான தகுதியை பெற்றுள்ளாரா என அறிய உதவும் நீதிப்பேராணை எது?

 58. செயலுறுத்தும் நீதிப்பேராணை
  தகுதி வினவும் நீதிப்பேராணை
  தடையுறுத்தும் நீதிப்பேராணை
  ஆவணக்கேட்பு நீதிப்பேராணை

 59. சரத்து 352ன்கீழ் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது எந்த சரத்தின் சுதந்திரங்கள் தாமாக நிறுத்தப்படும்?

 60. சரத்து 15
  சரத்து 17
  சரத்து 19
  சரத்து 21

Post a Comment

0 Comments

தேடித்தேடித் தேர்வேழுதலாம்